போனில் தெரிந்த ரகசியம்: வெளிநாட்டில் இருந்து வந்த அன்று இரவே மனைவியை கொலை செய்த கணவன்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா
1920Shares
1920Shares
ibctamil.com

வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி - கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி வேலைக்காக வெளிநாடு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி ராமசாமி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

அன்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாம் அதிகமானது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த கவுசல்யாவை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கவுசல்யா இறந்த வழக்கை பொலிசார் விசாரித்து ராமசாமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ராமசாமியின் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்த அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவுசல்யாவின் நடத்தை குறித்து புகார் தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் உடனே வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் இதுகுறித்து சண்டைப் போட்டதாகவும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்