7 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்: தண்டனையை நிறைவேற்றும் நாள் அறிவிப்பு

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று கொடூரமாக சீரழித்த இளைஞரை எதிர்வரும் புதனன்று தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் அலி என்ற 23 வயது இளைஞருக்கே பாகிஸ்தான் விரைவு நீதிமன்றம் இந்த மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இச்சம்பவம் நடந்தது.

மாலை நேரம் பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய குறித்த சிறுமியை கடத்திய இம்ராம் அலி, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ளான்.

பாடசாலையில் இருந்து வெகு நேரமாகியும் குடியிருப்புக்கு திரும்பாத சிறுமி தொடர்பில் பொலிசாரை அணுகிய உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்துள்ள விசாரணையில் சிறுமியை இம்ரான் அலி கடத்திச் செல்வது அப்பகுதி கண்காணிப்பு கமெராவில் சிக்கியிருந்தது.

சிறுமியின் பெற்றோர் சவுதி அரேபியாவில் உம்ரா தொழுகைக்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

ஜனவரி 5 ஆம் திகதி சிறுமி மாயமான நிலையில் கிராம மக்கள் பொலிசாருக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாகவும், குற்றவாளியை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில் ஜனவரி 9 ஆம் திகதி குப்பை மேட்டில் இருந்து சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது. உடர்கூறு சோதனையில், சிறுமி கொடூரமாக பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்த பொலிசார், இம்ரான் அலிக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.

அதில் தற்போது ஒரு வழக்கில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்