இலங்கையின் பிரதமரான மகிந்த! தமிழர்களுக்கு பாதிப்பு... தமிழக அரசியல் தலைவர்கள் பேட்டி

Report Print Raju Raju in தெற்காசியா
275Shares

இலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசின் தலையீடே காரணம் என தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும் கூட்டணி உடைந்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கி விட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். ராஜபக்சவும் உடனடியாக பதவியேற்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இலங்கையில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றத்திற்கு இந்திய அரசின் தலையீடே காரணம். இலங்கையின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள ராஜபக்சவால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவும் பாதிப்பை சந்திக்கும் என கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும், ஈழ ஆதரவாளருமான கவுதமன் கூறுகையில், சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை பயணமும், ராஜபக்சவின் இந்திய பயணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ராஜபக்சவால் இந்தியாவுக்கு பேராபத்து நிகழும், அவருடனான தொடர்பை இந்தியா துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்