13 உயிர்களை கொன்று ருசித்த இரண்டு குட்டிகளின் தாய் புலி: இறுதியில் நடந்த சோக சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் மகாராஷ்டிராவில் 13 உயிர்களைப் பலி கொண்ட அவனி என்ற பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது.

யவத்மால் பகுதியில் கடந்த 2 வருடமாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது அவனி என்ற பெண் புலி.

அவனியிடம் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பலரது உயிர்களைப் பறித்து வரும் இந்தப் புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு அவனி சுட்டுக் கொல்லப்பட்டது. கொல்லப்பட்ட அவனிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொடூரப் புலியாக இருந்தாலும் இப்படி வேட்டையாடி கொல்லப்பட்டது வருத்தம் தருவதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்