உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு எது தெரியுமா?

Report Print Kabilan in தெற்காசியா

ஆயிரம் பெண் விமானிகளைக் கொண்டுள்ளதால், உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

உலகில் உள்ள மொத்த விமானிகளில் பெண்கள் 5.4 சதவிதமாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விமானிகளில் பெண் விமானிகள் 12.4 சதவிதமாக உள்ளனர்.

இது உலகில் உள்ள அதிக பெண் விமானிகளின் சராசரியை விட இரு மடங்காகும். அதாவது, உலகளவில் சுமார் 1.5 லட்சம் விமானிகள் உள்ளனர். அவர்களில் 8,061 பேர் பெண்கள் ஆவர். மேலும், இதில் கேப்டனாக உள்ளவர்கள் 2,190 பேர் ஆவர்.

ஆனால், இந்தியாவில் உள்ள மொத்த 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண் விமானிகளாகவும், அவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர்.

இதன் காரணமாக உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers