இளம்பெண்ணை உயிருடன் தீ வைத்து கொளுத்திய கொடூரம்: காதலன் உட்பட இருவர் கைது

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் விசாகபட்டினம் நகரில் கடந்த செவ்வாய் அன்று இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பில்லாள ஈஸ்வர ராவு மற்றும் லட்சுமி தம்பதிகளின் இளைய மகள் 17 வயதான பத்மாவதி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் இவர், இவரது எதிர் வீட்டில் குடியிருக்கும் ராஜு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் பத்மாவதியையும் அந்த இளைஞரையும் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று ராஜுவின் நண்பருக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனையடுத்து இரவு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் பத்மாவதியும் கலந்து கொண்டுள்ளார். அடுத்த நாள் காலையில் வனப்பகுதி அருகே முற்றாக எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதை அப்பகுதி மக்கள் அறிந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார், சடலத்தை மீட்டுள்ளனர். உருத்தெரியாத வகையில் அந்த சடலம் சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார்,

பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மோப்ப நாயின் உதவியை நாடிய பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனிடையே தங்களது மகள் பத்மாவதியை காணவில்லை என கூறி ஈஸ்வர ராவு பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கொல்லப்பட்ட இளம்பெண் பத்மாவதியா என விசாரித்த பொலிசாருக்கு முதலில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டது பத்மாவதி எனவும், பலாத்காரத்திற்கு இடையே அவர் கொல்லப்பட்டதும், சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதும் தெரிய வந்தது.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் ராஜு மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பின்னரே பத்மாவதியை கொலை செய்தது யார் என்ற தகவல் வெளியாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers