அவங்க என் மனைவியா இருந்தாலும் வங்கி கணக்கு உரிமை கிடையாது: நீதிமன்றத்தில் வாதாடிய கணவன்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவரின் வங்கி கணக்கு அறிக்கைகளை அவர் அனுமதியில்லாமல் மனைவிக்கு கொடுத்த வங்கிக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் தினேஷ் பம்னனி. இவரின் மனைவி இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கிக்கு சென்று கணவரின் மூன்றாண்டின் வங்கி கணக்கு அறிக்கைகளை வாங்கியுள்ளார்.

இதற்கு தினேஷ் கணக்கிலிருந்து ரூ.103 கழிக்கப்பட்டதாக அவர் செல்போனுக்கு மெசேஜ் வந்தது.

இதையடுத்து குறித்த வங்கிக்கு சென்ற தினேஷ் இது குறித்து விசாரித்த போது ஊழியர்கள் நடந்ததை சொன்னார்கள்.

இதையடுத்து தன் அனுமதி இல்லாமல் கணக்கு விபரங்களை மனைவியிடம் கூறிய வங்கி மீது தினேஷ் வழக்கு தொடர்ந்தார்.

அவர் நீதிமன்றத்தில் கூறுகையில், எனக்கும் என் மனைவிக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டு அந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

என் வங்கி கணக்கு அறிக்கையை என் மனைவி பார்த்தால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வாய்ப்புண்டு.

என் மனைவியாகவே இருந்தாலும் என் அனுமதியில்லாமல் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்தது வங்கியின் தவறு என வாதிட்டார்.

இதையடுத்து, தினேஷ் கையெழுத்திட்ட கடிதம் இல்லாமல் அவர் கணக்கு அறிக்கையை வங்கி வெளியிட்டது தவறு.

இதனால் தினேஷுக்கு ஏற்பட்ட மனவேதனை, சட்ட செலவுகளுக்காக வங்கியானது ரூ.10,000-ஐ தினேஷுக்கு அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers