பணக்காரர்களுக்கு மட்டும் காமாத்திபுரம் பெண்கள்: அன்று 50 ஆயிரம் இன்று 1,500

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மும்பையில் செயல்பட்டு வரும் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுரத்தின் முகம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கால் நூற்றாண்டுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இங்கு இருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 1,500 ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்தில் பம்பாயின் சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து வந்த காமத்தி எனும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கே தங்கவைக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், பிரிட்டிஷ் வீரர்கள் இங்கிருக்கும் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அதுவே நாளடைவில் சிவப்பு விளக்குப் பகுதியாக உருமாற்றமடைந்தது என்பது காமாத்திபுரத்தின் வரலாறாக கூறப்படுகிறது.

முன்பு அது அந்தந்த வசதிக்காரர்களுக்கு ஏற்றார்போல தொழில் இருந்து வந்தது, இப்போது பணக்காரர்களுக்காக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உயரும் ரியல் எஸ்டேட் மதிப்பு இங்குள்ள 500 சதுர அடி நிலத்தை இரண்டு கோடி ரூபாய் மதிப்பு மிக்கதாக மாற்றியிருக்கிறது. 250 சதுர அடி வீடுகள் 25 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், இனியும் எல்லாத் தரப்பினருக்குமானதாக பாலியல் தொழில் இங்கு நடத்துவது சிரமம் என கூறுகின்றனர்.

பாலியல் தொழில் இவ்வளவு வேகமாக வீழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும்கூட இன்னும் கும்பல்களின் ஆதிக்கம் முழுமையாக மாறவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers