இளம் பெண்ணுடன் தவறான பழக்கம்..கமல்ஹாசன் பட பாணியில் நடந்த கொலை: 2 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது 2 ஆண்டுகள் கழித்து அம்பலமாகியுள்ளது.

ஜெகதீஷுக்கு, அதே பகுதியை சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற 20 பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது தகாத உறவாக மாறியது.

இதையடுத்து அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், இதற்கு ஜெகதீஷ் குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இருப்பினும் டிவிங்கிள் தொல்லை கொடுத்து வந்துள்ளார், இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து தனது மூன்று மகன்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, 2016ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி டிவிங்கிளை தனியாக காரில் அழைத்து சென்று கழுத்தி நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவளது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து வேறொரு இடத்தில் புதைத்துள்ளனர்.

விங்கிளின் பெற்றோர், மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

ஓர் இடத்தில் யாரையோ கொன்று புதைத்திருப்பதாகச் சந்தேகமாக இருக்கிறது என்று பொலிசாருக்கு தகவல் வந்தததையடுத்து அந்தப் பகுதியில் தோண்டினர். அங்கு நாய் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் குழப்பமடைந்தனர். பின்னர் டிம்பிள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கைக் கிடப்பில் போட்டனர். சம்பவம் நடந்து 2 வருடங்களாகிவிட்டது.

இந்நிலையில், மூளை மின் அலை ரேகைப்பதிவு (Brain Electrical Oscillation Signature (BEOS) என்ற நவீன முறை சோதனையின் படி விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்தனர்.

டிவிங்கிளின் பெற்றோரிடமும், ஜெகதீஷிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. பின்னர் உண்மை வெளியா னது. டிவிங்கிள் புதைக்கப்பட்ட இடத்தை பொலிசார் கண்டுபிடித்து தோண்டினர். பிரேஸ்லெட் மற்றும் சில ஆபரணங்கள் அங்கு கைப்பற்றப் பட்டன.

ஜெகதீஷும் அவர் மகன்களும் கொலைக்கு முன், அஜய்தேவ்கன் நடித்த த்ரிஷயம்’ படத்தைப் பார்த்துள்ளனர். (இந்தப் படம் தமிழில் கமல் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது). அந்தப் படத்தின் கதைப்படி வழக்கை திசை திருப்ப முயன்றுள்ளனர்.

இப்போது ஜெகதீஷ், அஜய், விஜய், வினய், நீலேஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers