ஒரே ஒரு வீடியோவால் பிரபலமான கேரள பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in தெற்காசியா

டிக்டாக் செயலி இன்றைய இளசுகள் முதல் பெரியவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

இதனால் மிக சுலபமாக பிரபலமடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அந்த வகையில் கேரளாவை சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க பாட்டி Mary Joseph Mampilly விரைவில் படத்தில் நடிக்க உள்ளாராம்.

இவரது பேரனான Jinson, பாட்டிக்கே தெரியாமல் எடுத்த வீடியோ பிரபலமாக படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து தன் முதல் படத்தை இயக்கப்போகும் Binshad Nazer கூறுகையில், 90 வயது மதிக்கத்தக்க பாட்டியை மையமாக கொண்ட கதை இது, இதற்காக கேரள திரையுலகிலிருந்து யாரையாவது நடிக்க வைக்கலாம் என நினைத்திருந்தேன்.

ஆனால் இந்த வீடியோவை பார்த்த பின்னர் அவரையே நடிக்கவைக்க முடிவு செய்துவிட்டேன், இவர் தான் மிக பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்