16 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 11 பேர்! கொடூர சம்பவம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் 16 வயது சிறுமியை மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 11 பேரை கைது செய்ய கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கான மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது சொந்த மாமா 4 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவர் மட்டுமின்றி மேலும் 3 பேர் சிறுமியைத் தனியிடங்களுக்கு அழைத்துச் சென்று கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.

சிறுமியை கொடுமைப்படுத்திய காட்சிகளை தங்கள் செல்போனில் அவர்கள் பதிவு செய்து இதைப் பற்றி வெளியில் கூறினால், நாங்கள் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து விஜய் என்பவர் உள்ளிட்ட 7 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக தான் அனுபவித்து வரும் சித்ரவதையில் இருந்து தன்னை மீட்கும்படி சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தவழக்கில் 3 பேரை மட்டும் கைது செய்துள்ள பொலிசார், மேலும் 8 குற்றவாளிகளைக் கைது செய்யத் தாமதிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் சிறுமி புகார் கொடுத்த காவல்நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்