பயணத்தின் போது வாந்தி எடுக்க முயற்சித்த பெண்: அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் பெண் ஒருவா் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியில் நீட்டிய நிலையில் அவரது தலை மின் கம்பத்தில் அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவா் பேருந்தில் பயணம் செய்த போது வாந்தி எடுத்தார்.

வாந்தி எடுப்பதற்காக பேருந்தில் இருந்து தலையை வெளியில் நீட்டினார். அப்போது நடந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் இருந்து பன்னா மாவட்டத்திற்கு ஆஷா ராணி (56) என்ற பெண் பேருந்தில் பயணம் செய்த போது வாந்தி வந்ததால் பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டியுள்ளார்.

பேருந்து வேகமாக சென்றதால் அப்பெண்ணின் தலை அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் பெண்ணின் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers