60 வயது பொண்டாட்டி வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாள்: 68 வயதிலும் கணவனின் அதிர்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

காலம்போன கடைசியில் சந்தேகத்தின் பெயரால் தனது 60 வயது மனைவியை கொலை செய்துள்ள 68 வயது கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி - செல்வி தம்பதியினருக்கு 3 பிள்ளைகள். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. பேரன், பேத்திகளும் உள்ள நிலையில் தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் செல்வி யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது சத்தியமூர்த்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்துவிட்டு தலை துவட்டிக்கொண்டே வந்த சத்தியமூர்த்தி, அந்த துண்டால் செல்வியின் கழுத்தை இறுக்கி மூச்சை திணறடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், காவல்நிலையம் சென்று நடந்தவற்றை வாக்குமூலமாக அளித்து சரணடைந்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers