தூக்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே இலக்கு... 6 மாதங்களில் 10 கொலைகள்: கும்பமேளாவில் சிக்கிய நபர்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் 10 பேரைக் கொடூரமாக கொலை செய்த சீரியல் கொலையாளி ஒருவர் கும்பமேளாவில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தில் கடந்த ஆறு மாதங்களில் 10 பேர் மர்மமான முறையில் கொலையாகியுள்ளனர். கொல்லப்பட்ட 10 பேரும் சாலைகளில், மாநகராட்சிப் பூங்கா எனப் பொது இடங்களிலேயே கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

மட்டுமின்றி அவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்தபோது கூர்மையான கோடாரி மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டுத் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக துப்புத்துலங்காமல் அலகாபாத் பொலிசார் திணறிவந்தனர்.

இந்த நிலையில்தான் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவிலும் இதேபோன்று சிலர் கொல்லப்பட்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

இதனால் கொலையாளியைத் தேடும் பணியைப் பொலிசார் முடுக்கிவிட்டனர். இறுதியில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொலையாளியை பொலிசார் கண்டுபிடித்தனர்.

கும்பமேளாவில் அவர் சுற்றித்திரிந்ததும் அங்கேயே வைத்து இந்தக் கொடூர குற்றவாளியைக் கைது செய்தனர்.

38 வயதான அந்தக் குற்றவாளியின் பெயர் கல்வா சாயிபாபா. ஏற்கெனவே கொலை குற்றத்துக்காகச் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தவர்.

இதுகுறித்து பேசிய பொலிசார், குறித்த நபர் கும்ப மேளாவுக்கு வந்தவர் ஒருவரையும் கொலை செய்துள்ளார். சிசிடிவி உதவியால் கையும் களவுமாக இவனைப் பிடித்தோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்