6 மாசத்துக்கு முன்னாடி போனான்...எங்க இருக்கானு தெரியல: மகனை இழந்து கதறும் தாய்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சேலம் மாவட்டத்தில் 6 மாதத்துக்கு முன்னாடி தனது மகனை பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு கூட்டிட்டு போனார்கள், ஆனால் தற்போது அவன் எங்க இருக்கிறான் என்றுகூட தெரியவில்லை என்று கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்துள்ளா தாய் தமிழ்செல்வி.

என் கணவர் அய்யாவு கூலிவேலைக்கு செல்கிறார். எங்களுக்கு மோகன், ரவிக்குமார் என இரண்டு மகன்கள்.

எங்க மூத்தப்பையன் விபத்தில் இறந்துட்டான். இப்ப எங்களுக்கு ரவிக்குமார் மட்டும் தான் இருக்கிறான். இவனை நம்பி வாழ்ந்துட்டு இருந்தோம்.

ஆனால், 6 மாதத்துக்கு முன்னர் மேஸ்திரி சுகுமார் என்பவருடன் சேர்ந்து சென்னைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றான்.

அதிலிருந்து போன் பண்ணவும் இல்லை, ஆள் எங்க இருக்கிறான். என்ன செய்யறான்னே தெரியல கூட்டிட்டு போன சுகுமாரிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை என்று கதறி அழுதுள்ளார்.

மது அருந்தி விட்டு கல்லூரியில் ரொம்ப தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனால் அவனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பிட்டாங்க. அவன் எங்க போனான் என்று எங்களுக்குத் தெரியாது என்று சுகுமார் கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers