கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க முயன்ற மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் வீட்டின் உள்ளே புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது, அவர்களை சிறுத்தை விரட்டி கடித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பின் ஜாலந்தார் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் சிறுத்தை ஒன்று திடீரென்று புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் முதலில் சிறுத்தையை வீட்டின் உள்ளே வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

அதன் பின் அதை பிடிப்பதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிய வலை ஒன்றை எடுத்து வந்து பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் கடும் கோபம் கொண்ட சிறுத்தை அங்கிருந்த மக்களை விரட்ட, இதனால் மக்கள் அனைவரும் சிறுத்தையிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கும், இங்கும் ஓடினர்.

இருப்பினும் பலரை சிறுத்தை கடிதத்தால், அதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த சிறுத்தை இறுதியில் பிடிக்கப்பட்டதா? வனத்துறையினர் வந்தார்களா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers