தொல்லை கொடுத்த இளைஞனை தனியாக அழைத்த இளம்பெண்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் தனக்கு தொல்லை தந்த இளைஞனை இளம் பெண் ஆள் வைத்து கடத்திச் சென்று, தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் மீது பொலிசார் சமீபத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற போது, அந்த வீட்டில் மரவேலை செய்து வந்த இளைஞன், அந்த பெண்ணிடம் போன் நம்பரை வாங்கியுள்ளார்.

அதன் பின் அந்த பெண்ணிற்கு தொடர்ச்சியாக போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண் எங்கு சென்றாலும், பின் தொடர்ந்தபடியே இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இதற்கு என்ன தீர்வு என்று யோசித்த போது ஆள் வைத்து அடிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

அதன் படி, செகந்திரபாதிலுள்ள கல்லூரிக்கு அருகில் வரும் படி அழைத்துள்ளார். இளைஞனும் ஆசையில் அங்கு தனியாக சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர்கள் அவரை கண் மூடித்தனமாக தாக்க, அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து அடித்த போதும், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளைஞனை தூக்கிச் சென்று அடித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து எப்படியோ தப்பிய இளைஞன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இளம் பெண்ணின் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers