பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட கிச்சடி உணவில் இருந்த பாம்பு: அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு பாத்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது Gargavan Zilla Parishad முதன்மை பள்ளி. இங்கு இரு தினங்களுக்கு முன்னர் மதிய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது.

1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை உள்ள 80 மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

அப்போது கிச்சடி கொண்டு வரப்பட்ட பெரிய பாத்திரத்தில் பாம்பு இருப்பதை ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உணவு வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

குறித்த உணவை மாணவர்கள் யாரேனும் சாப்பிட்டார்களா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்