இரண்டு பேரை ஒரே நேரத்தில் காதலித்த அக்கா! கண்டுப்பிடித்த தங்கை.. அடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் இரண்டு ஆண்களுடன் தகாத உறவில் இளம்பெண் இருந்ததை அவரின் 12 வயது தங்கை கண்டுப்பிடித்ததால் அவரை அப்பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரை சேர்ந்தவர் ஹிமான்சி (12). இந்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் ஹிமான்சியின் அக்கா காஜல் தான் அவரை கொலை செய்தார் என தெரியவந்தது.

அதாவது, காஜலுக்கு மோகித் மற்றும் பரத் என்ற இரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்த நிலையில் அதை ஹிமான்சி கண்டுப்பிடித்துள்ளார்.

இதை அவர் வெளியில் செhன்னால் தனக்கு அவமானமாகி விடும் என பயந்த காஜல் தனது காதலர்களான மோகித் மற்றும் பரத்துடன் சேர்ந்து ஹிமான்சியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து காஜலை பொலிசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோகித் மற்றும் பரத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers