குழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த செயல்! அதிடமிருந்து காப்பாற்ற போராடிய பெண்ணின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானாவில் யாரோ ஒருவரின் குழந்தையை தூக்கி வந்த குரங்கு ஒன்று, நடுரோட்டில் அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த பெண் ஒருவர் குழந்தையை காப்பாற்றுவதறாக, அதன் அருகில் சென்ற போது குழந்தையை கட்டியணைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் குரங்கு தன்னுடைய கோபத்தை காட்டுகிறது.

இதனால் கடித்துவிடுவோம் என்று அஞ்சிய அந்த பெண், குரங்கின் பக்கத்திலே நிற்கிறார். இதைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் குழந்தையின் தலையை பிடித்து விளையாடுவது, அதன் பின் அதை கட்டியணைத்து கொள்வது என்று குரங்கு விளையாடுகிறது.

இறுதியில் குரங்கிடமிருந்து குழந்தை பத்திரமாக காப்பாற்றட்டதாக, அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஒரிசாவில் இதே போன்று பிறந்த குழந்தையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்று, சுவற்றில் நின்று கொண்டிருந்தது, அப்போது குழந்தை கீழே விழுந்த வீடியோ வைராலாயது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers