காதலர் தினத்தில் நடந்த கட்டாய திருமணம்: மகளை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தந்தை

Report Print Fathima Fathima in தெற்காசியா

இந்தியாவில் காதலர் தினமான நேற்று தனது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதை வீடியோவில் பார்த்த தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரை வசிக்கும் தந்தை ஒருவர், நேற்றைய தினம் கல்லூரிக்கு சென்று தனது மகளை விட்டுவிட்டு வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது, அதில் Kandlakoyaல் இருக்கும் Oxygen park atல் தன்னுடைய மகளுக்கு வேறொரு நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக தாலிக்கட்டியுள்ளார்.

மூன்றிலிருந்து நான்கு பேர் சூழந்து கொண்டு இச்செயலை செய்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவர் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது, தன் மகள் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

அத்துடன் மகள் மற்றும் குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர், நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால் பொலிசுக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

குறித்த வீடியோவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், திருமணம் செய்து வைத்தவர்கள் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்கள் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து IPC section 342 (wrongful confinement), section 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty) மற்றும் section 506 (criminal intimidation) போன்ற பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் திருமணம் செய்து வைத்தவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும், காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிராக இச்செயலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவரை கைது செய்த பொலிசார், மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...