இரண்டு தலை, வாய்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி! வெளியான ஆச்சரிய வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் இரண்டு தலை மற்றும் வாய்களுடன் பிறந்த கன்றுக்குட்டியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிமாச்சால பிரதேசத்தின் Shimla கிராமத்தில் கடந்த 7-ஆம் திகதி அதிசயமாக இரண்டு கண்கள் மற்றும் இரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி வைரலான நிலையில், இப்போது ராஜாஸ்தான் மாநிலத்தில் கடந்த புதன் கிழமை இதே போன்று கன்றுக் குட்டி பிறந்துள்ளது.

இரண்டு கன்றுக்குட்டிக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அந்த கன்று குட்டிக்கு கண்கள் இரு பக்கமும் சரியாக இருந்தன, ஆனால் இப்போது பிறந்துள்ள கன்றுக்குட்டிக்கு இரண்டு கண்களும் பக்கத்து, பக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது 7000 சேர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்