5 மனித அரக்கன்கள்.... 5 நாட்கள் நரக சித்ரவதை: என் மகளுக்கு நேர்ந்த கொடுமை! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பள்ளி மாணவி உஷாவின் எலும்புக்கூடுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுப்பிரமணி - எல்லம்மாள் தம்பதியினரின் மகள் உஷா அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், கடந்த 11 ஆம் திகதி கரும்புத் தோட்டத்தின் அருகில் ஓடையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் உஷாவை ஒருதலையாக காதலித்த சங்கரய்யா என்பவரை கைது செய்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரும்புதோட்டம் வழியாக உஷா பள்ளிக்கு செல்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சங்கரய்யா, உஷாவை கடத்தியுள்ளார்.

பிறகு, மாணவி உஷாவை, அந்தப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சங்கரய்யா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்கள் வந்துள்ளனர்.

சங்கரய்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்த அவர்கள் மாணவி உஷாவை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.

அதன்பிறகு மாணவிக்கு சாக்லேட்டில் போதை மருந்தினை கலந்துகொண்டு 5 நாட்களாக தவறாக நடந்துகொண்டனர்.

அதன்பிறகு அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கீச்சாளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் உள்ள ஓடையில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பொலிசாரின் அலட்சியத்தால்தான் உஷாவுக்கு இப்படி கொடுமை நடந்தது, பொலிசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் அக்கறை காட்டி, உஷாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனது மகள் நன்றாக படிப்பாள், கூலிவேலை செய்துதான் அவளை படிக்கவைக்கிறேன், எனது மகளுக்கு நேர்ந்த கொடுமை, வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது என பெற்றோர் கண்ணீர் சிந்தியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி உஷாவைக் கொலை செய்த குற்றத்துக்காக நாதமுனி, பாலாஜி, ஜெகதீஷ், பாஸ்கர், சங்கரய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...