தீவிரவாதியால் இறந்த இராணுவ வீரரின் உடல் வீட்டிற்கு வருவதற்குள் வங்கி கணக்கில் குவிந்த பணம்: செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in தெற்காசியா

இராணுவ வீரரின் உடல் வீட்டிற்கு வருவதற்குள் நாமினியின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ள சம்பவம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்த நிலையில், அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கும் கொண்டு வரப்பட்டன.

அந்த வகையில் இந்த தாக்குலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குரு(33) என்பவர் மரணமடைந்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்த இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. கலா என்ற மனைவி உள்ளார்.

இவர் தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பு தான் தன் மனைவி கலா மற்றும் பெற்றோரான ஹொன்னையா மற்றும் தாய் சிக்கெலம்மாவை சந்தித்து சென்றுள்ளார்.

அப்போது அவர் தன் குடும்பத்தினரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆனால் அது எல்லாம் நடப்பதற்குள் பரிதாபமாக இறந்துவிட்டார்.

குருவிற்கு பெற்றோர் மீது அதிக பாசம் என்பதால், அவர்கள் மீது எல்.ஐ.சி பாலிசி எடுத்து வந்துள்ளார்.

இவரின் மரண செய்தியை கேட்ட அடுத்த நிமிடமே எல்.ஐ.சி நாமினியின் வங்கிக் கணக்கில் அவருக்குச் சேர வேண்டிய 3,82,199 ரூபாயை நாமினி கணக்கில் செலுத்தியுள்ளது.

பொதுவாக இயற்கைக்கு மாறான மரணம் என்றால் போலீஸ் எப்.ஐ.ஆர் கொடுத்தால்தான் எல்.ஐ.சி நிறுவனம் நாமினியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்.

ஆனால் இறந்த குருவின் குடும்பத்தினரின் நிலையை அறிந்தே, குருவின் வயதான பெற்றோர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே மாண்ட்யா மாவட்ட எல்.ஐ.சி அதிகாரிகள் குருவின் உடல் வீட்டுக்கு வருவதற்குள் பணத்தை நாமினியின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதால், அவர்களின் இந்த மனிதாபிமிக்க செயல் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் குருவின் மனைவிக்கு கர்நாடக அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers