பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா! தூள் துளாக சிதறி கிடந்த வீடியோ காட்சி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.

இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா கொடுத்த இந்த தாக்குதலுக்கு தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனால் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் 4 பகுதிகளில் குண்டுவீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையின் f16 ரக போர்விமானங்கள் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி, குண்டுகளை வீசியதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய விமானப் படை பாகிஸ்தானின் ‘F16’ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானின் மற்றொரு விமானம் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் நவ்ஷேரா எல்லைக்கு அப்பால் லாம் பள்ளத்தாக்கில் பாக்கிஸ்தான் விமானம் விழுந்துள்ளது. அப்போது போர் விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அ ந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், எல்லை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பாகிஸ்தான் விமானப் படை இன்று பதிலடி அளித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் பறந்த இரண்டு இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் விமானப் படையால் சுடப்பட்டன. இதில் இரண்டும் கீழே விழுந்தன. இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்