இந்தியாவை தாக்க அரபு நாடுகளின் உதவியை நாடுகிறாரா இம்ரான் கான்…?

Report Print Abisha in தெற்காசியா

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போதைய பதட்டமான சூழலில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரபு நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் தாக்குதலை எதிர் கொள்ளவும் திருப்பி தாக்குதல் நடத்தவும் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார்,என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சவுதி இளவரசர் பாகிஸ்தான் சுற்றுபயணம்மேற்கொண்ட போது இருநாடுகளின் நட்பை வெளிபடுத்தியதை அடுத்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.

இம்ரான்கான் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மானுக்குதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். நீண்ட நேரம் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.அதே போல் அரபு அமிரக முடி இளவரசர் ஷேக் முகமது சயாத் உடனும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார் இம்ரான்கான்

மற்றொரு புறம் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின்உதவியை மறைமுகமாக நாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்