பாகிஸ்தானியார்களால் இரத்தம் வழியும் வரை தாக்கப்பட்ட தமிழக வீரர் எப்படி இருக்கிறார்? வெளியான வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்ட இந்திய இராணுவ வீரர் நலமாக இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் விமான படையும், பாகிஸ்தான் மீது இந்திய விமான படையும் மாறி மாறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் புகுந்த பின் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 எப்-16 விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை காமேண்டோ அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

அதன் பின் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தனை அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் தாக்கினர். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியதால், அதைக் கண்ட இந்திய மக்கள் பாகிஸ்தான் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட அபிநந்தன் நலமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் என்னை சிலர் தாக்கியதாகவும், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தான் பத்திரமாக மீட்டு வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்