பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்தவொரு நாடும் பேசவில்லை- முன்னாள் தூதர் பரபரப்பு பேட்டி

Report Print Balamanuvelan in தெற்காசியா

இந்தியா- பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்திய பிறகு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசவில்லை என அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரான ஹுசேன் ஹக்கானி தெரிவித்துள்ளார்.

பாலக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது குண்டு வீசி அழித்ததில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஹுசேன் ஹக்கானி, இந்தியா தாக்குதல் நடத்திய பின்னர் எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசவில்லை.

சீனா கூட, இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளதே தவிர, பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து தாக்கிய இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அதி தீவிர தேசப்பற்று செண்டிமெண்ட் வேண்டுமானால் இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.

ஆனால், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை அளிக்கும் ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் காத்து வந்த பொறுமை குறைந்து கொண்டே வருகிறது, அது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்றார் Haqqani.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...