பாகிஸ்தானின் தேசிய தினத்திற்கு மோடியின் வாழ்த்து.. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இது ஆரம்பமாக இருக்கும்: இம்ரான் கான்

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தானின் தேசிய தினத்திற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருப்பது காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆரம்பமாக இருக்கும் என கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், தங்கள் நாட்டின் தேசிய தினத்திற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், துணைக் கண்ட மக்கள் ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம் ஏற்பட ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் எனவும், பாகிஸ்தானின் தேசிய தினத்தில் பாகிஸ்தான் மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘எங்கள் மக்களுக்காக மோடி அனுப்பிய செய்தியை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தான் தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், எல்லை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் விரிவான கலந்துரையாடலின் ஆரம்பம் என்று இதனை நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய தினத்திற்கு மோடி வாழ்த்து கூறியதை அந்நாட்டு தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். எனினும், பாகிஸ்தான் தினத்தை புறக்கணிப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers