ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்! சில நொடிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ

Report Print Santhan in தெற்காசியா

கேரளாவில் ஆம்புலன்சின் உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்த மக்கள் சில நொடிகளில் வழியை ஏற்படுத்தி அனுப்பி வைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கேரளாவின் பாலக்காட்டில் ஆண்டுதோறூம் மார்ச் மாதத்தில் மன்னார்காட் பூரம் என்ற விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழா அப்பகுதியில் மிகவும் பிரபல என்பதால், குறித்த விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கூடுவது வழக்கம்.

மேளதாளங்கள் இசைத்து இசைக்கு ஏற்ப நடனமாடி மன்னார்காட் பூரம் விழாவை மக்கள் விமர்சியாக கொண்டாடுவர்.

அதே போன்று இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மேலதாளத்துடன் அங்கிருக்கும் சாலை ஒன்றில் கொண்டாடிய போது, ஆம்புலன்ஸ் ஒன்று அந்த சாலை வழியே வந்துள்ளது.

இதைக் கண்ட அந்த மக்கள், கூட்டத்தின் நடுவே சிக்கிய ஆம்புலன்சிற்கு சில நொடிகளில் நூற்றுக்கணக்கான மக்களும் வழி ஏற்படுத்தி ஆம்புலன்சை அனுப்பி வைக்கின்றனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதால், இதைக் கண்ட இணையவாசிகல்

ஒரு உயிரின் போராட்டத்தை உணர்ந்து அவர்கள் இப்படி ஒன்றாக சேர்ந்து வழிவிட்டிருக்கும் செயல் பாராட்டுக்குரியது என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers