ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த இளம் பெண்..டெலிவரி கொடுக்க வந்த வாலிபன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் ஆன்லைனின் உணவு ஆர்டர் செய்த நிலையில், உணவு கொண்ட வந்த இளைஞர் வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை ஸ்விக்கி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அதன் பின் சிறிது நேரத்தில் உணவை டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணிடம் டெலிவரி செய்ய வந்த இளைஞன் அத்துமீறி நடந்துள்ளான்.

இதனால் அந்த பெண் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அந்த நபர் டெலிவரிக்கு வந்தபோது, முதலில் என்னிடம் ஏதோ கூறினான்.

அது எனக்கு சரியாகக் கேட்கவில்லை. நான் மீண்டும் என்ன என்று கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.

உடனே என் உணவை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கதவை அடைத்துவிட்டேன். அவன் கொண்டுவந்த உணவை சாப்பிட வெறுப்பாக இருந்தது. அதைத் தூக்கி வீசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அந்த பெண் ஸ்விக்கி வாடிக்கையாளர்கள் குறை கூறும் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர்கள் இப்படி நடந்து கொண்டதற்கு மன்னித்து கொள்ளவும் என்று கூறி வருந்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை அனுப்பியுள்ளது.

அவர்களின் இந்த செயலால், அந்தப் பெண் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானார். அந்த இளைஞனுக்கு தண்டனை கொடுக்காமல், இப்படி கூப்பனை அனுப்பியுள்ளனர். நிச்சயமாக அவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட ஸ்விக்கி நிறுவனம் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதுடன், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers