23 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான பெண்! அதன் பின் நடந்த விபரீத சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த இளைஞன் அந்த பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு சரவணன் என்ற 23 வயது மகன் உள்ளார்.

கூலித் தொழிலாளியான சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மனைவி பாரதி(36) என்பவருடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. பாரதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், சரவணனுடன், பாரதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு ஓடியுள்ளார்.

எங்கு தேடியும் இவர்கள் கிடைக்காத நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது சரவணனின் உறவினருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவர் நேற்று காலை முத்துகவுண்டன்பாளையம் சென்று அங்கிருக்கும் சரவணனிடம்,

பாரதிக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதுமட்டுமின்றி உன்னைவிட அவருக்கு வயது அதிகம். அந்த பெண்ணுடனான தொடர்பை விட்டுவிடு. உனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைப் பற்றி சரவணன், பாரதியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் இரண்டு பேரும் வீட்டில் இருந்து மண்எண்ணெயை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகிய நிலையில் அலறி துடிக்க, அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்துள்ளனர்.

ஆனால் இருவரும் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்