நம்பி ஏமாந்துவிட்டேன்: அலங்கோலமாக கிடந்த 16 வயது சிறுமியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில் சாலையின் ஓரத்தில் சிறுமி ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.

மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்தன. மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

நடந்த சம்பவம் குறித்து சிறுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் பேசினார்.

அவர் ஆறுதலா பேசியதையடுத்து அவரிடம் நடந்தவற்றை கூறினேன். அவரும் என்னை கோயிலுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு எனக்கு குளிர்பானம் வாங்கிகொடுத்தார்.

அடுத்து என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மயக்க மருந்து கொடுத்து கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் தேவா, ராஜா, தினேஷ் ஆகியோர் என தெரியவந்ததையடுத்து, ராஜா மற்றும் தேவா கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள தினேஷை பொலிசார் தேடி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றதை இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கைதானவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers