துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞன்! வீட்டை சோதித்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞனை அதே மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதீஷ்குமார்-சசி தம்பதியினர். இவர்கள் ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் அடுத்த முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த ஏழு மாதமாக வாடகை வீட்டில் தங்கி, அங்கிருக்கும் சாய ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

அவ்வப்போது இவர்கள் சொந்த ஊரான பீகாருக்கு இரயிலில் சென்று வருவார்கள் என்பதால், அப்போது அந்த ரயிலில் பீகாரைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நவீன்குமார் இவர்கள் வீட்டில் தங்கி,ஈரோட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் திடீரென நவீன்குமாரின் பெற்றோருக்கு போன் செய்து 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்குமார் பெற்றோர், உடனடியாக பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் நவீன் குமாரை தேடி பொலிசார் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர்.

அதன் பின் தமிழ்நாடு பொலிசார் உதவியுடன், நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு நவீன்குமார் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிதீஷ்குமார்-சசி தம்பதியினர் இரும்புகளை துண்டாக்க பயன்படும் ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால்,இடுப்பு பகுதி என தனிதனியாக துண்டுதுண்டாக வெட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நவீன்குமார் உடலை கைப்பற்றிய பொலிசார் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நிதீஷ்குமார்-சசி தம்பதியினரை கைது செய்த பொலிசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே இந்த கொடூர கொலையின் பின்னணி தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்