வீடியோ காலில் கடைசியாக காதலியிடம் பேசிய காதலன்: ஒன்றாக சமாதியடைந்த இரு இதயங்கள்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்நாத் - ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால், பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பிரேம்நாத் தான் தற்கொலை செய்யப்போவதாக வீடியோ காலில் ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த ஆயிஷாவும் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட ஆயிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தங்களது உண்மையான காதலை நிரூபித்து இரு இதயங்களும் ஒன்றாக சமாதியடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்