தொடர்ந்து குளிக்காமல் இருந்த கணவர்: திருமணமாகி 1 வருடத்தில் விவாகரத்து செய்த மனைவி

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மத்தியபிரதேசத்தை சேர்ந்த 23 வயது பெண்மணி, தனது கணவர் குளிக்காமல் இருப்பதால் திருமணமாகி 1 வருடத்திற்குள் விவாகரத்து கோரியுள்ளார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தொடர்ந்து 7 நாட்களாகியும் குளிக்காமல் இருப்பது, துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக வாசனை திரவியத்தை பயன்படுத்தி வந்ததை பார்த்து மனைவி கண்டித்துள்ளார்.

மேலும், தாடியையும் சுத்தம் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் இப்படி ஒரு கணவராடு வாழ இயலாது என மனைவி கடந்த ஆண்டு விவாகரத்து கோரினார்.

இந்நிலையில், 6 மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழுமாறும், இருவருக்கும் ஆலோசனை வழக்கப்படும் என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டும், தனக்கு விவாகரத்து வேண்டும் என பெண் உறுதியாக இருக்கிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers