திருமணத்திற்கு சென்ற இடத்தில் பிணமாக திரும்பிய சோகம்!

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் 8 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளனர்.

வானா என்ற பகுதி வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது.

அதில் சென்ற பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகாமையில் உள்ளவர்கள் அளித்த தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 8 குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் சடலங்களை மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர்.

மேலும் மாயமான 6 குழந்தைகளை மீட்க தேடுதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்