பழங்குடியின சிறுமிகள் தங்கும் விடுதியில் நடந்த பயங்கரம்...!

Report Print Abisha in தெற்காசியா

இந்தியாவின், நாக்பூரில் பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி அதிகாரிகள் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின், நாக்பூரில் உள்ள பழங்குடியினர் மாணவிகள் தங்கிபடிக்கும் விடுதி ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகள் சந்திரபூர் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட.

இதில், 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, அச்சிறுமிகள் தங்கியிருக்கும் பழங்குடி மாணவர்களுக்கான விடுதியில் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது விடுதியின் கண்காணிப்பாளரான சாபன் பச்சாரேவின் மற்றும் ஒருவர் சேர்ந்து சிறுமிகளை பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அந்த விடுதியில் மேலும் சில சிறுமிகளும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers