பாழடைந்த வீட்டிற்குள் சென்ற 11 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? ரத்தம் நிற்கவில்லை என கண்ணீர் மல்க கூறிய பாட்டி

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் பாழடைந்த வீட்டின் உள்ளே விறகு எடுக்கச் சென்ற 11 வயது சிறுமி இரத்தம் வழிந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.சி.எப், ராஜீவ்காந்திநகர் முதலாவது தெருவில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை என்பதால், அவர் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டதால், வீட்டில் சமையல் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் விறகு வாங்குவதற்கு கூட பணமில்லை என்பதால், சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் விற்கு எடுக்க சென்றுள்ளார்.

விறகுகளை அவர் எடுக்க முயன்ற போது திடீரென்று டமார் என்று சத்தம் கேட்டதால், அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்து பார்த்த போது, சிறுமியின் தலையிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பாழடைந்த வீட்டில் ஆய்வு நடதிய போது அந்த வீட்டின் உள்ளே 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனால் பொலிசார் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி கூறுகையில், அம்மாவும் அப்பாவும் அவருக்கு இல்லை. வறுமையோடு தினமும் போராடி வருகிறோம்.

நான் வேலைக்குச் சென்ற நேரத்தில் சமையலுக்காக விறகு எடுக்க அங்குச் சென்றுள்ளார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நான் வந்துபார்த்தபோது பேத்தியின் தலையிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அவளிடம் கேட்டபோது ஒரு விறகு கட்டையை எடுக்க கல்லை தூக்கிப் போட்டதாகக் கூறினார்.

அந்த இடத்தில்தான் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. நல்லவேளை உயிருக்கு ஆபத்து இல்லை. மக்கள் குடியிருக்கும் இடத்தில் யார் இப்படி வெடிகுண்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.

கஷ்டப்பட்டு பேத்தியை வளர்த்துவருகிறேன். அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அவளின் கை, தலையில் காயங்கள் உள்ளன என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்