சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை.. 7 மாத பொலிசார் தேடுதல் வேட்டைக்கு பின் எப்படி சிக்கினார் தெரியுமா?

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் பெற்ற மகளுக்கே பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தந்தையை 7 மாத தேடலுக்கு பின் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சரவணன். கடம்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

இதில் அவருடைய மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் தாயாருடனும் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரவணன், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்தமகள் தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்டு ஆத்திரமடைந்த தாய் கணவர் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கடந்தாண்டு அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கு குறித்து சரவணன்னுக்கு தெரியவந்த நிலையில், உடனே அவர் தலைமறைவானார். அதை தொடர்ந்து பொலிசார் கடந்த நவம்பர் முதல் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சரவணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது இன்று அவர் பொலிசாரிடம் பிடிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers