நின்று போன மாதவிடாய்... வயிற்று வலியால் துடித்த இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in தெற்காசியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து 15கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திடீரென மாதவிடாய் நின்றுள்ளது. அடுத்த சில நாட்களில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவருடைய தந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடைய வயிற்றுவலி மற்றும் மாதவிடாய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அறிகுறிகள் மோசமடைந்துள்ளன. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது இளம்பெண்ணின் கருப்பையில் பெரியளவிலான நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துளளனர்.

இதனையடுத்து சிறப்பு புற்றுநோய் மருத்துவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு 15கிலோ எடையிலான கட்டி வயிற்றில் இருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

அந்த கட்டி புற்றுநோயாக கருதப்படவில்லை மற்றும் பெண் முழுமையான மீட்சியடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்