தெற்காசியாவின் மிகப்பெரிய மசூதி அருகில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

Report Print Abisha in தெற்காசியா

பாகிஸ்தான் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின், லாகூர் நகரில் அமைந்துள்ள சூபி மசூதி. இது தெற்காசியாவின் மிகப்பெரிய மசூதியாக திகழ்கின்றது.

11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,ரமலான் நோன்பு காலம் என்பதால், இன்று காலை வழக்கமான தொழுகை நடைபெற்றது. இதற்காக மசூதிக்கு வெளியில் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

reuters
அந்நேரத்தில் தற்கொலைகுண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யதுள்ளான். அதில் முன்னதாக 8 பேர் உயிரிழந்ததாகவும். மேலும் 25பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட பொலிசார் பலியாகி உள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, இது குறித்து பேசிய நகர காவல் ஆணையர், Ghazanfar Ali ”இது காவல் துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்த மசூதியில் 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த மசூதிக்கு முழுநேரமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

reuters

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்