ரமலான் நோன்பை பாதியில் கைவிட்டு உயிருக்கு போராடியவருக்கு இரத்தம் கொடுத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் நோயாளிக்கு இரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இஸ்லாமிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பனுல்லா அகமது (26). இவர் தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றும் நிலையில் அவரது அறை நண்பனான தபாஷ் பகவதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

தபாஷ் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் இரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது.

பல இடங்களில் முயற்சி செய்தும் இரத்தம் கிடைக்காத நிலையில் இதை தன் நண்பர் பானுல்லாவிடம் சொல்ல, பானுல்லாவே இரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் இரத்தம் கொடுத்தால் சரிவராது என தபாஷ் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை.

பின்னர் பானுல்லா பிடிவாதமாக மருத்துவமனைக்குச் சென்று ஒரு யூனிட் இரத்தத்தை நோயாளிக்கு கொடுத்துள்ளார்.

இரத்ததானம் செய்தது குறித்து பேசிய பானுல்லா அகமது, இரத்தம் வேண்டும் என்றதும் நான் கொடுக்க தயாரானேன். இது குறித்து எங்கள் மத பெரியவர்களுடன் ஆலோசித்தேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்யக் கூறினர். மேலும் இரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ளக் கூறியும் அறிவுரை வழங்கினார்கள் என கூறியுள்ளார்.

இதனிடையில் நோன்பை பாதியில் கைவிட்டு இரத்ததானம் கொடுத்த பானுல்லாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்