மனைவியின் கை விரல்களை வெட்டி வீசிய கணவன்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

வங்காளத்தில் இளம் மனைவி கல்லூரியில் சேர்ந்து படித்து வருவதை அறிந்த கணவன் அவரது கை விரல்களை வெட்டி துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வருபவர் 30 வயதான ரபிகுல் இஸ்லாம். இவரது மனைவி 21 வயதான ஹவா அக்தர்.

சம்பவத்தன்று மனைவியை ஆசையாக அழைத்த ரபிகுல், ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறி அவரது கண்களை ஒரு துண்டால் கட்டிவிட்டுள்ளார்.

பின்னர் சமையல் கத்தியை பயன்படுத்தி மனைவியின் கை விரல்களில் ஐந்தை வெட்டி வீசியுள்ளார்.

8-வது வகுப்பு வரை மட்டுமே படித்த ரபிகுல், தமது மனைவியை கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுமுறைக்கு நாட்டிற்கு வந்த ரபிகுல், தமது மனைவியின் விரல்களை வெட்டி வீசியுள்ளார்.

மட்டுமின்றி, வெட்டப்பட்ட விரல்களை குப்பை தொட்டியிலும் விசி அப்புறப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் குறித்த பெண் புகார் அளித்த நிலையில், பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...