வீட்டை விட்டு அடித்து துரத்திய கணவன்... உடனடியாக வேறு நபரை மணந்த மனைவி... வெளியான பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவரை பிரிந்த இளம்பெண் மதம் மாறிய நிலையில் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முகமது ரயீஸ் என்ற நபருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இந்து மதத்துக்கு மாறிய ரேஷ்மா தனது பெயரை ராணி என மாற்றி கொண்டு தீபு என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து ராணி (எ) ரேஷ்மா கூறுகையில் நானும் முகமதும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டோம்.

நான் வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி முகமது என்னை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டார், மேலும் முத்தலாக் கொடுத்துவிட்டார்.

இதன்பின்னர் தீபு என்பவர் தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்.

இதையடுத்து அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். முகமது வசிக்கும் பகுதியில் உள்ள பேக்கிரியில் தான் தீபு வேலை செய்கிறார்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சம்பவம் குறித்து வேறு மாதிரி கூறுகிறார்கள்.

அதாவது ரேஷ்மா தனது முதல் கணவரை பிரிந்த பின்னரே முகமதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

முகமது ரேஷ்மாவின் சகோதரியின் கணவர் ஆவார். அவரை முகமது பிரிந்த பின்னரே ரேஷ்மாவை மணந்து கொண்டார்.

தற்போது தீபுவுடன் ரேஷ்மாவுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த முகமது அவரை பிரிந்துவிட்டார் என கூறுகிறார்கள்.

இதனிடையில் ரேஷ்மாவை தீபு திருமணம் செய்து கொண்டது அவர் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இது குறித்து தீபுவின் தந்தை கூறுகையில், என் மகன் ரேஷ்மாவை மணந்தது குறித்து தற்போது தான் எனக்கு தெரியும்.

எங்களிடம் சொல்லாமல் அவன் ஒரு வாரத்துக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

இப்படியொரு காரியம் செய்த என் மகன் தீபுவை இனி என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்