பறக்கும் விமானத்தில் 33 வயதான இந்தியருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு... அடுத்து நடந்தது என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா

பறக்கும் விமானத்தில் 33 வயது பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து மஸ்கட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாம்நகர் விமானப்படை தளத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பின்னர், நோயாளியை ஒரு இந்திய விமானப் படையைச் சேர்ந்த மருத்துவர் ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து குஜராத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் புனீத் சந்தா டுவிட்டரில் கூறுகையில், 33 வயது மதிக்கத்தக்க இந்திய பயணி மாரடைப்பில் அவதிப்பட்டதை அடுத்து ஏஐ 973 டெல்லி மஸ்கட் விமானம் ஜாம்நகர் விமானப் படைத் தளத்திற்கு இரவு 22.30 மணிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதற்கு இந்திய விமானப் படை உடனடியாக பொறுப்பேற்றது.

சிவில் விமானநிலையத்திற்கு வந்துசேர சற்று நேரம் பிடித்ததது எனினும், இந்திய விமானப் படை மருத்துவர் ஒருவர் நோயாளியை உடனடியாக தன்னுடன் பத்திரமாக குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தேவையான அவசர சிசிச்சை அளிக்கப்பட்டு பயணி காப்பாற்றப்பட்டார்.

இப்பயணியின் பெயர் உடனடியாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் புறப்பட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்