2001-ல் மனைவிகளை கொன்றுவிட்டு தப்பித்த இரண்டு ஆண்கள்...18 ஆண்டுகளுக்கு பின்னர் கைது.. அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவிகளை இரண்டு ஆண்கள் கொலை செய்த வழக்கில் ஒருவர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் பவன்பூரை சேர்ந்தவர் முனீஸ் சிங் (45). இவர் தனது மனைவி வந்தனாவுடன் வசித்து வந்தார்.

முனீஸ் வசித்த வீட்டின் பக்கத்தின் அறையில் நரேந்திர சிங் என்பவர் தனது மனைவி ஷோபா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 2001-ல் முனீஸ் தனது மனைவி வந்தனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

அதே போல நரேந்திர சிங்கும் தனது கர்ப்பிணி மனைவி ஷோபாவை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் முனீஷை பொலிசார் தற்போது அகமதாபாத்தில் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், முனீஷுக்கும், வந்தனாவுக்கும் 1996-ல் திருமணம் நடந்தது.

திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காமல் இருந்த நிலையில் இது தொடர்பாக மனைவி மீது முனீஷ் கோபத்தில் இருந்தார்.

இதோடு சிறுவயதில் இருந்து வந்தனாவின் மாமா பலமுறை அவரை சீரழித்த விடயமும் முனீஷுக்கு தெரியவந்தது.

அதே நேரத்தில் நரேந்திரசிங்கின் மனைவி ஷோபா 2001-ல் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் நடத்தையின் மீது நரேந்திரசிங்குக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் முனீஷும், நரேந்திரசிங்கும் ஒன்றாக மது அருந்தும் போது தங்களின் மனைவிகள் குறித்து ஒருவருக்கொருவர் பேசிவிட்டு அவர்களை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதன் பின்னர் கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவானார்கள்.

தற்போது முனீஷை கைது செய்துள்ளோம், நரேந்திரசிங் எங்குள்ளார் என தெரியவில்லை.

மனைவியை கொன்ற முனீஷ் பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக இரண்டாவது மனைவியிடம் முனீஷ் பொய் சொல்லியுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers