டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Report Print Abisha in தெற்காசியா

டெல்லியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுகொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர் டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர். இவர் டெல்லியின் நஜப்கர் பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகின்றது.

இவர் உடற்பயிற்சி நிலையத்துக்கு அருகே இருக்கும் கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் மோஹித்தை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் மோஹித் சம்வ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மூன்று நபர்கள் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோஹித்தின் சமூக வலைதள பக்கத்தில் வந்த பின்னூட்டங்களையும் பற்றியும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்