லட்சக்கணக்கில் சம்பாதித்து அப்பாவுக்கு அனுப்பினேன்... வெளிநாட்டு இளைஞரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் எல்லை படையினரிடம் லஞ்சம் கொடுத்து தான் நாட்டிற்குள் வந்தேன் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் துபாரி மாவட்டத்தின், சுகோலியா என்ற நகரத்தில் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் நடமாடிக்கொண்டிருந்தார்.

இதனால் அவரை பிடித்து விசாரணை செய்த போது பொலிசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவன் கூறுகையில், தன்னுடைய பெயர் அய்னுல் ஹக் எனவும் வங்கதேசத்தில் இருந்து கடந்த 2013-ஆம் ஆண்டே இந்தியாவிற்கு வந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

நான் மட்டுமின்றி என்னுடன் சேர்ந்து 11 பேர் மேற்கு வங்கத்தின் மால்டா பகுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தோம். இதற்காக, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினரிடம் 3,276 ரூபாய் லஞ்சமாக கொடுத்தோம், மேற்கு வங்கத்தில் எனக்கு ஆதார் கார்டு எடுக்க ஆசாத் அலி என்பவர் உதவினார்.

அதன் பின்னர், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் வேலைபார்த்தேன். இதுவரைக்கும் என் தந்தைக்கு 7.20 லட்சம் அனுப்பியுள்ளேன்.

பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அஸ்ஸாம் மாநிலத்தில் சரிபா பேகம் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு, தற்போது 2 வயதில் மகன் உள்ளான் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், ஏற்கெனவே வங்கதேசத்தவர்களால் பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டிருக்க, லஞ்சம் வாங்கிக்கொண்டு வெளி நாட்டவர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்