வெளிநாட்டில் 10,000 கோடி சொத்துக்கள் முடக்கம்! லண்டனில் கைதான நிரவ் மோடியை மிஞ்சிய சகோதரர்கள்

Report Print Santhan in தெற்காசியா

ஸ்டெர்லின் பயோடெக் குழுமத்தை நிர்வகிக்கும் சந்தேசரா சகோதரர்கள், பொதுத்துறை வங்கிகளில் 15,000 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் 5,400 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த நிதின் சந்தேசரா, சேடன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகிய மூவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்டு வந்த விசாரணையில், வெளிநாட்டுகளில் உள்ள இந்திய வங்கிகளில் மேலும் 9,000 கோடியை அவர்கள் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாட்டு கரன்சிகளில் இவர்கள் கடன் வாங்கியுள்ளனர். குறிப்பாக, ஆந்திரா வங்கி, யுகோ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த சந்தேசரா சகோதரர்கள் 300 போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கி, அதை சொந்த செலவுக்கும் நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அமைக்கவும் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வங்கிகளில் வாங்கிய கடனை தொழில்சாராத பணிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

இதனால் வெளிநாடுகளில் அவர்களுக்கு சொந்தமான 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், சந்தேசரா சகோதரர்கள் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சந்தேசரா சகோதரர்களின் இந்த மோசடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த 11,400 கோடி மோசடியை விட அதிகம்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்